தமிழ் சினிமாவில் கதை திருட்டு சர்ச்சைகள் பெருகி வருகின்றன. விஜயின் ‘சர்கார்’, விஜய் சேதுபதியின் ‘96’ ஆகியப் படங்களும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. அதிலும் சர்கார் படம் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இறுதியாக செட்டில்மெண்டும் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படமும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அதாவது, வெங்கடேஷ் - நயந்தாரா நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ‘துளசி’ திரைப்படத்தின் கதைப்படி, கணவரின் முரட்டுத்தனத்தனம் பிடிக்காமல் மனைவி மகனை அழைத்துக்கொண்டு சென்றுவிடுகிறார். பிறகு மகனை சந்திக்க தந்தை போகும் போது, அவருக்கு பிரச்சினை வர, அதில் இருந்து மகனை காப்பாற்றினாரா, குடும்பம் ஒன்று சேர்ந்ததா, என்பது தான் கதை.
இந்த கதையும், விஸ்வாசம் கதையும் ஒன்றாக இருப்பதால் இது தொடர்பாக பிரச்சினை எழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், ஒருவேளை ‘துளசி’ படத்தின் ரைட்ஸை இயக்குநர் சிவா முறையாக வாங்கியே இந்த படத்தை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. காரணம், விஸ்வாசம் டைடில் கார்டில் கதை என்று சிவா பெயருடன் சேர்த்து ஒன்னொருவர் பெயரும் வருகிறது.
அறிமுக இயக்குநர் எழில் பெரியவேடி இயக்கத்தில், இயக்குநர் ராஜூ முருகன் வங்கும் படம் ‘பராரி’...
பிரம்மாண்டமான மற்றும் மண்சார்ந்த சினிமா அனுபவங்களுக்கு பெயர் பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ், மீண்டுமொருமுறை தலைசிறந்த காட்சியனுபவத்தை தரவுள்ளது...
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...