கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய மணிரத்னம், அதில் இருந்து கடந்த ஆண்டு வெளியான ‘செக்கச் சிவந்த வானம்’ படம் வரை ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்று வருகிறார்.
ஒளிப்பதிவாளர், எடிட்டர் என்று மணிரத்னம் அவ்வபோது தனது தொழில்நுட்ப குழுவினரை மாற்றினாலும், ஏ.ஆர்.ரஹ்மானை மட்டும் மாற்ற மாட்டார். ரஹ்மானும் மணிரத்னம் படம் என்றால், கூடுதல் கவனம் செலுத்துவார்.
இந்த நிலையில், ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் வரலாற்று படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும், அதில் விஜய், விக்ரம், சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், இப்போதைக்கு வரலாற்று படம் இயக்கும் எண்ணம் மணிரத்னத்திற்கு இல்லையாம். அதற்கு பதிலாக குறுகிய கால தயாரிப்பாக ஜி.வி.பிர்காஷை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறாராம். இந்த படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளாராம்.
மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ‘96’, ‘சீதக்காதி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தாவை மணிரத்னம் ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதன் மூலம், 26 வருடங்களாக இணைந்து பணியாற்றி வந்த மணிரத்னம் - ரஹ்மான் கூட்டணி பிரிகிறது.
பிரம்மாண்டமான மற்றும் மண்சார்ந்த சினிமா அனுபவங்களுக்கு பெயர் பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ், மீண்டுமொருமுறை தலைசிறந்த காட்சியனுபவத்தை தரவுள்ளது...
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...