நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன், வர மட்டேன்...என்று கூறி மக்களை குழப்பி வந்த நிலையில், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரது மறைவுக்கு பிறகு அரசியலில் இறங்கியுள்ளார். இருப்பினும், தனது கட்சி மற்றும் கொடி, சின்னம் போன்றவற்றை அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
அதே சமயம், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சில குழப்பங்கள் நிலவினாலும், அவரது ரசிகர் மன்றங்கள் ‘ரஜினி மக்கள்’ மன்றம்’ என்ற பெயரில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, ரஜினிகாந்த் விரைவில் டிவி சேனல் ஒன்றை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக அவர் மூன்று பெயரிகளை பதிவும் செய்திருக்கிறார். இருப்பினும், இன்னும் அவரது கட்சி பெயர் மட்டும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, தனுஷ் தனது குடும்பத்தோடு சாமி தரிசனத்திற்காக திருப்பதி சென்றிருக்கிறார். அப்போது அவரிடம் பேசிய பத்திரிகையாளர்களில் ஒருவர், “வரும் தேர்தலில் ரஜினி தனித்து போட்டியிடுவாரா அல்லது கூட்டணி அமைக்கிறாரா?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த தனுஷ், “சாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன், அரசியல் பேச மாட்டேன். ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி அவரே அறிவிப்பார், இதில் நான் எதுவும் சொல்ல முடியாது.” என்று கூறியுள்ளார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...