கடந்த இரண்டு வாரங்களாக படங்கள் ஏதும் வெளியாகத நிலையில், இந்த வாரம் 3 படங்கள் வெளியாவதோடு, அடுத்த வாரமான செப்டம்பர் 8 ஆம் தேதி 4 படங்கள் வெளியாகிறது. மொத்தத்தில் செப்டம்பர் மாதம் முழுவதும் ஏராளமான படங்கள் வெளியாவதுடன், ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சில முக்கிய படங்களும் வெளியாகின்றன. அதில் ஒன்று தான் சிவகார்த்திகேயன், நயந்தாரா நடித்துள்ள ‘வேலைக்காரன்’.
24 ஏ.எம் ஸ்டியோஸ் நிறுவனம் தயாரிப்பில், மோகன் ராஜா இயக்கியுள்ள ‘வேலைக்காரன்’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் வேலைகள் சில முடிய காலதாமதம் ஆவதால், 29 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகாது என்று கூறப்படுகிறது. இருந்தாலும், அறிவித்த தேதியில் படத்தை வெளியிட படக்குழுவினர் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறார்களாம்.
இருந்தாலும், படத்தின் தரம் கருதி, அனைத்து வேலைகளையும் மிக நுணுக்கமாக செய்வதால், பட வேலையில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...