தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான நிக்கி கல்ராணி, தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள நிலையில் அவரது நடிப்பில் வெளியாக வேண்டிய படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. அதில் ஒன்று தான் ‘சார்லி சாப்ளின் 2’
ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் பிரபு முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க, ரவி மரியா, அரவிந்த் ஆகாஷ், லுத்புதின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
அம்ரீஷ் இசையமைப்பில் ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், படம் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகிறது.
இது குறித்த அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் பிரபு தேவா, நிக்கி கல்ராணி உள்ளிட்ட அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய நிக்கி கல்ராணி, படத்தை தயாரித்த அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, தன்னை நன்றாக கவனித்துக்கொண்டதாக கூறியதோடு, அவரை தான் அப்பாவாக தத்தெடுத்துக் கொள்ளப் போகிறேன், என்று விளையாட்டாக கூறினார்.
ஏற்கனவே ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் டி.சிவா, ‘சார்லின் சாப்ளின் 2’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...