2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை தமிழ் சினிமாவுக்கு நல்ல துவக்கமாக அமைந்திருக்கிறது. தொடர் விடுமுறைக்கு ஏற்பட அஜித்தின் ’விஸ்வாசம்’ மற்றும் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ ஆகிய இரண்டு படங்களும் மக்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, பேட்ட ரூ.100 கோடி வசூல் செய்திருக்கிறது, என்று படக்குழு அறிவித்திருக்கும் நிலையில், அஜித்தின் விஸ்வாசம் ரூ.125 கோடி வசூல் செய்திருப்பதாக அப்படக்குழு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்புகளை தொடர்ந்து இரண்டு படத்தின் தயாரிப்பு தரப்பும் மோதிக்கொள்ளும் விதமாக டீசர் மற்றும் சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
படம் வெளியாவதற்கு முன்பு அஜித் ரசிகர்கள் ரஜினிகாந்தை மிக கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது படக்குழுவினரும் மோதிக்கொள்ளும் சூழல் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பேட்ட மற்றும் விஸ்வாசம் இரண்டு படங்களில் எந்த படம் மிகப்பெரிய வசூலை ஈட்டு வருகிறது, என்பது குறித்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான செண்பகமூர்த்தி, சமீபத்திய பேட்டி ஒன்றில், “பேட்ட மற்றும் விஸ்வாசம் இரண்டு படங்களும் நல்லபடியாக ஓடிக்கொண்டிருக்கிறது. பேட்ட படம் தமிழகத்தை தாண்டி வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
செண்பகமூர்த்தி தான் சென்னை, செங்கல்பட்டு, சேலம், மதுரை என தமிழ்நாட்டை சுற்றி பல இடங்களில் பேட்ட படத்தை விநியோகம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...