‘பாகுபலி’ படத்திற்கு பிறகு உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்தி வரும் அனுஷ்கா, பல படங்களை நிராகரித்து வந்த நிலையில், தற்போது ஒரு திகில் படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை பீப்பள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோபா பிலிம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
அனுஷ்காவுடன் மாதவன், அஞ்சலி, ஷாலிணி பாண்டே, சுபா ராஜு, அவசராலா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவரும் நடிக்கிறார்.
ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.
டி.ஜி.விஸ்வபிரசாத் மற்றும் கோனா வெங்கட் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தில் கோபி சுந்தர், ஷானியேல் டியோ, கோபி மோகன், நீராஜா கோனா ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...