உதயநிதியின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தவர் மதுமிதா. அப்படத்தில் இவரை சந்தானம் ஜாங்கிரி என்று அழைப்பார். அதனால் தற்போது தமிழ் சினிமாவே ஜாங்கிரி மதுமிதா என்று தான் அழைக்கிறது. பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் ஜாங்கிரி மதுமிதா, சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே, மதுமிதாவுக்கும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் உஷா என்ற பெண்ணுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இதையடுத்து மதுமிதா மீது உஷா போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் கோபமடைந்த மதுமிதா, மீண்டும் உஷாவுடன் தகராரில் ஈடுபட்டதோடு, அவரது கை கடித்து விட்டாராம். கடி வாங்கிய உஷா வலியால் துடித்ததோடு, மீண்டும் போலீசில் மதுமிதா மீது புகார் அளித்துள்ளார்.
மதுமிதாவும் போலீசில் புகார் அளிக்க, இருவருடைய புகாரையும் பெற்றுக் கொண்ட வளசரவாக்கம் போலீசார், தற்போது இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்களாம்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...