‘விஸ்வாசம்’ வெற்றியால் அஜித் ரொம்பவே குஷியடைந்திருப்பதாக கூறப்படுகிறது. சிவாவுடன் அவர் இணைந்த முதல் மூன்று படங்களும் எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், விஸ்வாசம் அவர்கள் எதிர்ப்பார்க்காத வெற்றியை கொடுத்திருக்கிறது.
விஸ்வாசத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் இந்தி படத்தின் ரீமேக்கில் அஜித் நடிக்க இருக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் வித்யா பாலன் நடிக்கிறார்.
கதை தேர்விலும், கதாபாத்திர தேர்விலும் கரார் காட்டும் வித்யா பாலன், ரீமேக் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நிலையில், பிங்க் ரீமேக்கில் நடிக்க ஒப்புக்கொண்டது பாலிவுட் வட்டாரத்தை ஆச்சர்யம் அடைய செய்தது. மேலும், அஜித் படம் என்பதால் தான் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது. காரணம், வித்யா பாலன் மலையாளி என்பதால் மலையாளியான அஜித் படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்தார் என்றும் பேசப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், வித்யா பாலனிடம் ‘பிங்க்’ படத்தில் நடிப்பது குறித்து கேட்டதற்கு, “பிங்க் படத்தில் எனது வேடம் சிறப்பு தோற்றம் என்பதாலும், அப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் என்பதாலும் தான், நான் நடிக்கிறேன். மற்றபடி யாருக்காவும் அந்த படத்தில் நான் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை. முழுக்க முழுக்க போனி கபூருக்காக மட்டுமே அப்படத்தில் நடிக்கிறேன்.” என்று கூறியிருக்கிறார்.
வித்யா பாலனின் இந்த பதில் நடிகர் அஜித்தை அசிங்கப்படுத்துவது போல இருப்பதாக சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்திருக்க, இதற்கு அஜித் ரசிகர்கள் எப்படி ரியாக்ட் பண்ண போகிறார்களோ!
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...