தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகும், பழமையான தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்கும் ஏ.வி.எம் நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் சுமார் 180 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்திருக்கிறது.
பல தலைமுறைகளாக திரைப்படம் தயாரித்து வந்த இந்த நிறுவனம் கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு ‘முதல் இடம்’ என்ற படத்துடன் திரைப்படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டது. இதை தொடர்ந்து இனி ஏவிஎம் நிறுவனம் படம் தயாரிப்பில் ஈடுபோவதில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்நிறுவனம் மீண்டும் படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சூர்யா நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகும் படம் ஒன்றை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ‘அயன்’ படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...