திரைப்பட வசனகர்த்தாவும் எழுத்தாளருமான பிருந்தா சாரதியின் முதல் கவிதத் தொகுப்பான ‘நடைவண்டி’ யின் 25 ஆம் ஆண்டு நிறைவையொட்டி அந்நூல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த நூலின் வெளியீட்டு விழா, சென்னைப் புத்தகக் கண்காட்சியில் உள்ள டிஸ்கவரி புக்ஸ் அரங்கத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் 25 படைப்பாளிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.
இயக்குநர் என்.லிங்குசாமி நூலை வெளியிட எழுத்தாளர் வண்ணதாசன் பெற்றுக் கொண்டார்.
நடிகை ரோகிணி, நடிகர் ஜோ மல்லூரி, இயக்குநர்கள் எம்.ஆர்.பாரதி, கேபிள் சங்கர், ராசி, அழகப்பன், நந்தா பெரியசாமி, எழுத்தாளர் பவா செல்லத்துரை, சீனிவாசன் நடராஜன், அஜயன் பாலா, கவிஞர்கள் இந்திரன், அறிவுமதி, ஏர்வாடி ராதாகிருஷ்ணன், ஆருர் தமிழ்நாடன், ஜெயபாஸ்கரன், ரவிசுப்ரமணியன், சல்மா, ஆண்டாள் பிரியதர்ஷினி, அ.வெண்ணிலா, மெளனன் யாத்ரீகா, அய்யப்ப மாதவன், கயல், மனுஷி, லதா அருணாசலம், கதிர்மொழி, பா.ஜெய்கணேஷ், இசாக், வேல் கண்ணன், அருண்ஆரதி, பா.மீனாட்சி சுந்தரம், வசனகர்த்தா பொழிச்சலூர் அரவிந்தன், ஓவியர் செந்தில் மற்றும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் என ஏராளமானவர்கள் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டார்கள்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...