தமிழ் சினிமாவில் ரஜினி - கமல் என்ற ஆளுமைகளை தொடர்ந்து தற்போது விஜய் - அஜித் ஆகியோர் ஏராளமான ரசிகர்களை கொண்டவர்களக இருக்கிறார்கள். இதற்கிடையே, ரஜினி - அஜித் இருவரும் நேரடியாக மோதிக்கொள்வது போல இவர்களது பேட்ட மற்றும் விஸ்வாசம் ஒரே நாளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றாலும், ரஜினியின் பேட்ட படத்தை காட்டிலும் அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தான் மிகப்பெரிய ஒபனிங் இருந்ததாகவும், ரஜினியின் படத்திற்கு முதல் நாள் எதிர்ப்பார்த்த ஓபனிங் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது. அதே சமயம், தமிழகம் தவிரித்து பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ரஜினியின் பேட்ட தான் சக்கை போடு போடுவதாகவும், அதற்கு அடுத்தக் கட்டத்தில் தான் விஸ்வாசம் இருப்பதாக கூறப்பட்டது.
இதை தொடர்ந்து, அஜித், ரஜினி ரசிகர்கள் கருத்து மோதலில் ஈடுபட, மறுபக்கம் விஸ்வாசம், பேட்ட படத்தின் தயாரிப்பு தரப்பும் டீசர்கள் மூலம் மோதிக்கொண்டார்கள்.
இந்த நிலையில், கடந்த ஜன்வரி 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இந்தியா முழுக்க மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படங்களின் டாப் 5 லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ’விஸ்வாசம்’, ரஜினியின் ‘பேட்ட’ படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.
அதாவது, இந்த லிஸ்ட்டில் அஜித்தின் விஸ்வாசம் இரண்டாம் இடத்தையும், ரஜினியின் பேட்ட 4 வது இடத்தையும் பிடித்துள்ளது. முதல் இடத்தை எப்2 என்ற ஆங்கிலப் படம் பிடித்திருக்கிறது.
இதோ அந்த டாப் 5 லிஸ்ட்:
1. F2 Fun And Frustration - 83%
2. Viswasam - 71%
3. Uri The Surgical Strike- 66%
4. Petta - 60%
5. KGF - 53%
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...