மனைவியின் மீது இருக்கும் அன்பை பல விதத்தில் வெளிப்படுத்தும் கணவர்கள் மத்தியில், தயாரிப்பாளர் டி.மகேந்திரன், தனது மனைவிக்காகவும், அவரை நினைத்து வருந்தும் குழந்தைகளுக்காகவும் இசை ஆல்பம் ஒன்றை தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.
சினிமா மீது ஆர்வம் கொண்ட டி.மகேந்திரன், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் முயற்சித்து பிறகு குடும்பம், குழந்தைகள் என்று இல்லற வாழ்வில் சந்தோஷமாக இருக்க, சமீபத்தில் அவரது மனைவி விபத்து ஒன்றில் எதிர்பாரதவிதமாக உயிரிழந்துவிட்டார். அவரது இறப்பை தாங்கிக்கொள்ளாத அவரது குழந்தைகள் பெரும் சோகத்தில் இருக்க, டி.மகேந்திரனும் தனது மனைவியின் பிரிவால் பெரும் துன்பத்துக்கு ஆளானதோடு, பிள்ளைகளின் சோகத்தை பார்த்து சோர்ந்து போனவர், தனது குழந்தைகளுக்காகவும், மனைவின் பிரிவின் சோகத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், மனைவியின் பெயரான ‘லிங்கம்’ என்ற தலைப்பில் இசை வீடியோ ஆல்பம் ஒன்றை தயாரித்திருக்கிறார்.
திருமணத்திற்கு முன்பு தனது மனைவியை காதலித்தது குறித்து ஒரு பாடல், திருமணம் நடைபெற்ற பிறகு கணவன் - மனைவி அன்பவை வெளிப்படுத்தும் ஒரு பாடல், அம்மாவை பிரிந்து வாடும் மகளின் கண்ணீர் பாடல் மற்றும் ஆட்டம் போட வைக்கும் ஒரு குத்து பாடல் என்று, இந்த ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கும் நான்கு பாடல்களும் தற்போது யூடியூபில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
‘லிங்கம்’ ஆல்படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களையும் எழுதியிருக்கும் டி.மகேந்திரன், ஒரு பாடலில் அவரது மகள் தமிழச்சியை நடிக்க வைத்திருக்கிறார். மேலும், ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கும் குத்து பாடலில் இயக்குநர் ராஜா தேசிங்கு நடித்திருக்கிறார். இவர் ’நட்பின் 100ம் நாள்’, ‘மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். இவர்களுடன் வடிவேல் கணேஷ், தமிழரசன், சுருளி, விஷ்வா, நந்தினி, மதினா, மலர்விழி, பிரவின்குமார் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
’லிங்கம்’ ஆல்பத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் கில்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் கலந்துக்கொண்டு ஆல்பத்தை வெளியிட்டார்.
வாசுதேவன் இயக்கியிருக்கும் இந்த ஆல்பத்திற்கு முராள் இசையமைத்திருக்கிறார். இவர் விஜய் ஆண்டனியிடம் பல படங்களில் உதவி இசையமைப்பாளராக பணியாற்றியிருப்பதோடு, பல படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். மகேஷ் மகாதேவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ராம் முருகன் நடனம் அமைக்க, இ.சுரேஷ் இணை தயாரிப்பு செய்திருக்கிறார். முராள், ராஜா, ஷாலு, செளமியா ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.
தமிழச்சி ஸ்டுடியோஸ் சார்பில் டி.மகேந்திரன் தயாரித்து பாடல் எழுதியிருக்கும் ’லிங்கம்’ ஆல்பத்தின் பாடல்களை பார்க்கவும், கேட்கவும் கீழே உள்ள லிங்குகளை க்ளிக் செய்யவும்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...