சினிமா தியேட்டர்கள் திருமண மண்டபமாகி வருகின்றது, என்று திரையுலகினர் பலர் வருத்தப்படும் நிலையில், இயக்குநர் சேரனுக்காக கமலா திரையரங்கம் ஒரு நாள் திருமணம் மண்டபமானதை பலர் பாராட்டியும் கொண்டாடியும் வருகிறார்கள்.
‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘தவமாய் தவமிருந்து’, ‘ஆட்டோகிராப்’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய சேரன், சிறு இடைவெளிக்குப் பிறகு ’திருமணம்’ என்ற படத்தை இயக்கி அதில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். இப்படத்தில் தம்பி ராமையாவின் மகம் உமாபதி ராமையா ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக காவ்யா சுரேஷ் நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமையா, சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், மனோபாலா, பால சரவணன், சீமா என்.நாயர், அனுபமா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். யுகபாரதி, லலிதானந்த், சேரன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நேற்று காலை நடைபெற்றது. இதில் பாடலாசிரியர் வைரமுத்து, இயக்குநர்கள் பாரதிராஜா, மகேந்திரன், கே.எஸ்.ரவிகுமார், மாரி செல்வராஜ், கார்த்திக் தங்கவேல், செழியன், அருண்ராஜா காமராஜ், கோபி நைனார், நடிகைகள் மீனா, பூணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.
’திருமணம்’ என்ற தலைப்புக்கு ஏற்றவாறு இசை நிகழ்ச்சி நடைபெற்ற கமலா திரையரங்கத்தை நேற்று பிரம்மாண்ட திருமண மண்டபமாகவே மாற்றிவிட்டார்கள். வாசலில் பிரம்மாண்டமான அலங்கார தூண்கள் இருக்க, சாலையில் இருந்து தியேட்டர் நுழை வாயில் வரை தென்னங்கீற்றுகள் இருக்க, வாழை மரம், மேல தாளம், படக்குழுவினர் அனைவரும் பட்டு புடவை, பட்டு வேட்டி சட்டை, பழைய காலத்து குழாய் ஒலிபெருக்கி, அதில் பழைய பாடல்கள் என்று பிரம்மாண்டமாகவும் அதே சமயம் பழமையான திருமண நிகழ்வை நம் கண் முன் நிறுத்தினார்கள்.
பிரேம்நாத் சிதம்பரம் தயாரித்திருக்கும் ‘திருமணம்’ படம் விரைவில் வெளியாக உள்ளது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...