‘காற்று வெளியிடை’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாக நிலையில், அதே படத்தில் மேலும் மூன்று ஹீரோக்கள் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.
‘அக்னி நட்சத்திரம்’, ‘இருவர்’, ‘திருடா திருடா’, ’தளபதி’ என்று இரண்டு ஹீரோக்களை வைத்து படம் இயக்கிய மணிரத்னம் மூன்று ஹீரோக்களை வைத்து ‘ஆயுத எழுத்து’ என்ற படத்தையும் இயக்க, முதன் முறையாக நான்கு ஹோரோக்கள் இருக்கும் படத்தை இயக்குகிறார்.
விஜய் சேதுபதி, துல்கர் சல்மான் என தற்போது இரண்டு ஹீரோக்கள் ஒப்பந்தமாகியிருப்பதாகவும், மற்ற இரண்டு ஹீரோக்களை தேர்வு செய்யும் பணியில் மணிரத்னம் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மணிரத்னம் படம் என்றதும் பெரும் ஆவலோடு இருந்த விஜய் சேதுப, தன்னுடன் மேலும் மூன்று ஹீரோக்கள் நடிக்கப் போகும் விஷயம் தெரிந்ததும் லேசா ஜர்க்கானாராம். இருந்தாலும், மணிரத்னம் படம் என்பதால் மனதை தேற்றிக் கொண்டு நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...