Latest News :

ரஜினி மகளின் இரண்டாவது திருமணம்! - தேதி வெளியானது
Wednesday January-23 2019

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா வெளிநாட்டில் கிராபிக்ஸ் துறையில் பயின்று வந்த நிலையில், ரஜினியை வைத்து ‘கோச்சுடையான்’ என்ற கிராபிக்ஸ் படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

 

இதற்கிடையே, சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் என்பவரை காதலித்து கடந்த 2010 ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து சினிமா தயாரிப்பு உள்ளிட்டவையில் ஈடுபட்ட செளந்தர்யா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ தொடங்கினார். 

 

இதற்கிடையே, செளந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்த உடன், அவர் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்து, விவாகரத்தும் பெற்று விட்டவர், எனது குழந்தை தான் இனி என் உலகம், என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

 

இந்த நிலையில், பெரிய தொழிலதிபரின் மகனுடன் காதல் வயப்பட்ட செளந்தர்யா இரண்டாவது திருமணத்திற்கு தயராகியுள்ளார். விசாகன் என்ற அவர் ‘வஞ்சகர் உலகம்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார். செளந்தர்யா - விசாகன் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில், திருமணம் தேதி வெளியாகமல் இருந்தது.

 

Soundarya and Visagan

 

தற்போது செளந்தர்யா - விசாகன் திருமண தேதி வெளியாகியுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி சென்னையில் உள்ள பெரிய மண்டபத்தில் செளந்தர்யா - விசாகன் நடைபெற உள்ளது.

Related News

4110

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery