பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். திருமண நிகழ்வுக்காக துபாய் சென்றிருந்தவர், தான் தங்கியிருந்த ஓட்டல் அறை பாத்ரூமில் உள்ள தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்தார். இதை தொடர்ந்து அவரது மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாக கூறப்பட்டது.
பிறகு, அவரது உடல் மும்பைக்கு கொண்டு வரப்பட்டு கெளரவத்துடன் அடக்கம் செய்யப்பட்டாலும், அவரது மரணம் தொடர்பான பல கேள்விகள் எழுந்ததோடு, அவரது மரணத்தை சுற்றி பல வதந்திகளும் பரவியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, ஸ்ரீதேவியின் வாழ்க்கையை ஆவண படமாக எடுக்க முடிவு செய்திருக்கும் அவரது கணவரும், திரைப்பட தயாரிப்பாளருமான போனி கபூரி அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், இயக்குநர் பிரசாந்த் மாம்புலி என்பவர் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற தலைப்பில் படம் ஒன்றை எடுத்துள்ளார். இதில் பிரியா பிரகாஷ் வாரியர் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் இந்தியில் வெளியானது. இதில், பிரியா குளியல் அறை தொட்டியில் விழுந்து கிடப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், இப்படம் ஸ்ரீதேவியின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும், என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் போனி கபூர், படத்திற்கு ஸ்ரீதேவி என்ற பெயரை பயன்படுத்த கூடாது, என்று கூறியிருப்பதோடு, இப்படத்திற்கு எதிராக வழக்கு தொடர்வேன், என்று கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதே சமயம், இப்படம் குறித்து விளக்கம் அளித்திருக்கும் பிரசாந்த் மாம்புலி, படத்தின் பெயரை மாற்ற முடியாது. படத்தில் நிறைய ரகசியங்கள் இருக்கின்றன. படம் பார்த்த பிறகு மக்கள் இது ஸ்ரீதேவியின் வாழ்க்கை கதையா என முடிவெடுப்பார்கள். நான் ஸ்ரீதேவியின் மீது மதிப்பு கொண்டவன், அவரை தவறாக சித்தரிக்க மாட்டேன், என்று தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...