ஸிக்மா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் மனோஜ் தயாரிப்பில் ஜித்தன் ரமேஷ் நடிக்கும் படத்திற்கு ‘உங்கள போடணும் சார்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த தலைப்பை சுருக்கமாக ‘ஓ.பி.எஸ்’ என்றும் கூறுகிறார்கள். அதேபோல், இதில் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி என 5 ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள்.
ஜித்தன் ரமேஷ் ஐந்து ஹீரோயின்களுடன் நடிக்கிறார் என்ற தகவல் ஒரு புறம் தீயாக பரவ, மறுபுறம் அதே படத்தில் நடிகை ஒருவருடன் அவர் வெறும் துண்டை மட்டும் போர்த்திக் கொண்டு, அரைநிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
இப்படம் குறித்து இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் கூறுகையில், “நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள் ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் ஒன்றாக தங்குகிறார்கள். ஜாலி, கேலி என நகரும் நாட்களும் இவர்கள் செய்கின்ற களேபரங்களும் ஃயூத்புல்லாக இருக்கும். சவாலாக அந்த வேலையை எடுத்துச்செய்யும் இந்த வாலிபர்களும் இளம்பெண்களும் ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர். அது என்ன பிரச்சினை? அதில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதை கலகலப்பான த்ரில்லராக உருவாக்கி இருக்கிறோம். வழக்கமாக படங்களில் ஆண்கள் தான் பெண்களை கிண்டல் கேலி செய்வதை பார்த்திருப்போம்.. மாறாக, இந்த படத்தில் பெண்கள், ஆண்களை கிண்டல் செய்வதும் கலாய்ப்பதும் புதிய அனுபவமாக இருக்கும்.
நீண்ட இடைவெளிக்குப் பின் ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கமர்சியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப்படம் நிச்சயமாக ஜித்தன் ரமேஷ்க்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும். பாடலாசிரியர் முருகன் மந்திரம், இப்படத்தில் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதி இருப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.
இந்த படத்திற்கு தலைப்பு யோசிக்கும் போது, சட்டென்று ரீச் ஆகிற மாதிரி இளைய தலைமுறைக்குப் பிடித்த தலைப்பாக இருக்கவேண்டும் என்று யோசித்தோம். அப்படி யோசிக்கும் போது ’நானும் ரௌடி தான்’ படத்தில் நயன்தாரா பேசிய ’ஒங்கள போடணும் சார்’ வசனம், நினைவுக்கு வந்தது. அதையே தலைப்பாக வைத்துவிட்டோம், நயன்தாராவுக்கு நன்றி.” என்றார்கள்.
ரெஜிமோன் இசையமைக்கும் இப்படத்திற்கு எஸ்.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். வசனம் மற்றும் பாடல்களை முருகன் மந்திரம் எழுத, அனில் கலையை நிர்மாணிக்கிறார். ஆக்ஷன் காட்சிகளை பையர் கார்த்திக் வடிவமைக்க, விஷ்ணு நாராயணன் படத்தொகுப்பு செய்கிறார். செரி செல்வி நடனத்தை வடிவமைக்கிறார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...