தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் ராகவா லாரன்ஸ், தற்போது ’காஞ்சனா 3’ படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
இந்த நிலையில், லான்ஸ் நடித்து இயக்கி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற ‘காஞ்சனா 1’ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில், 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக மிரட்டிய அக்ஷய் குமார் நடிக்கிறார். சரத்குமார் வேடத்தில் நடிக்க, பிரபல நடிகர் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இப்படத்தை இயக்கும் ராகவா லாரன்ஸ், இதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். வரும் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தின் பிற நட்சத்திரங்கள் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளனர்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...