தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார், தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயின் என்ற பெருமையோடு வலம் வரும் நயந்தாரா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதோடு, முன்னணி ஹீரோக்கள் பலரது படங்களிலும் நடித்து வருகிறார்.
நயந்தாராவின் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரது ‘ஐரா’ படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், எந்த ஹீரோவுக்காகவும் செய்யாத ஒன்றை இளம் ஹீரோ ஒருவருக்காக நயந்தாரா செய்யப்போவதை அறிந்த ஒட்டுமொத்த கோலிவுட்டும் அதிர்ச்சியடைந்திருக்கிறது.
எப்படிப்பட்ட பெரிய ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும், அந்த படத்தில் நடிப்பதோடு சரி, மற்றபடி படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் நயந்தாரா பங்கேற்க மாட்டார். இதை கொள்கையாகவே வைத்திருக்கும் நயந்தாரா, படத்திற்கான ஒப்பந்தம் போடும் போதே, இந்த கண்டிஷன் உடன் தான் போடுவாராம். தயாரிப்பாளர்களும் அவர் நடிக்கும் படம் வெற்றி பெறுவதால், நடித்தால் மட்டும் போதும், என்று அவரது கண்டிஷனுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டு கேட்கும் சம்பளத்தையும் கொடுத்துவிடுவார்களாம்.
ஆனால், அப்படிப்பட்ட நயந்தாராவின் கொள்கையை இளம் ஹீரோ ஒருவர் தகர்த்திருக்கிறார். அதுவும் தெலுங்கு ஹீரோ.
ஆம், சீரஞ்சீவி நடிப்பில் மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவாகும் பிரம்மாண்டமான படம் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’. அமிதாப் பச்சன், தமன்னா, விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, ஹூமா குரேஷி என பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி ஹீரோவுமான ராம்சரன் தயாரித்திருக்கும் இப்படம் ரிலிஸுக்கு தயாராகி வருகிறது. படம் பெரிய பட்ஜெட் என்பதால், படத்தின் புரோமோஷனையும் மிகப்பெரிய அளவில் செய்ய முடிவு செய்திருக்கும் ராம்சரண், பட புரொமோஷன் நிகழ்வுகளில் படத்தில் நடித்த நடிகர், நடிகை அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அதிலும், நயந்தாரா நிச்சயம் பங்கேற்க வேண்டும் என்று கூறியிருக்கிறாராம்.
இது தொடர்பாக, அவர் நேரடியாக நயந்தாராவிடம் பேச, நயந்தாராவும் சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் ஆந்திராவில் இருந்து தற்போது கோடம்பாக்கத்திற்கு பரவ, கோலிவுட்டில் நயந்தாராவை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்களும், அவருடன் நடித்த சில ஹீரோக்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...