அரசியல் நையாண்டி படம் - புதுமுகங்களுடன் பிரபலங்கள் பங்கு பெறும் ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ.
சாதிக்கொரு சங்கம் வீதிக்கொரு கட்சி என பெருகி வரும் நாட்டில் தொண்டர்களை விட தலைவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆலை இல்லாத ஊரில் இலுப்பை பூ தான் சர்க்கரை என்று பழமொழி உண்டு. அதே போல் தான் சிலர் ஆளில்லாத ஊரில் எம்.எல்.ஏ. போல் வலம் வருவார்கள். அப்படி ஒரு ஊரில் இருந்த ஒருவரை பற்றிய கதை தான் இது என்று கூறும் இயக்குநர் பகவதி பாலா மேலும் கூறுகையில் இதில் காதல், மோதல், அடிதடி, அரசியல் நையாண்டி என அனைத்தும் அங்கங்கே உண்டு. "ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ. என்று பெயரிட்டுள்ள இப்படத்தை சி. ராம்தாஸ் தமது ஸ்ரீபெரியநாயகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். நான் கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஒளிப்பதிவு செய்து டைரக்ட் செய்திருக்கிறேன். என்று கூறியுள்ளார்.
புதுமுகம் செல்வாவுடன் அனிதா ஜோடியாக நடித்துள்ள இதில் ஆர்.சுந்தர்ராஜன். நளினி, வையாபுரி, மீரா கிருஷ்ணன், கிங்காங், கொட்டாச்சி, போண்டா மணி, புரோட்டா முருகேஷ், சரோஜா பாட்டி என பலரும் நடித்துள்ளார்கள்.
தேவா இசையில் கபிலேஷ்வர், சுதந்திரதாஸ் பாடல்களை எழுதி உள்ளனர். ராம் நாத் படத்தொகுப்பையும், தீப்பொறி நித்யா சண்டை பயிற்சியையும், ரமேஷ் ரெட்டி நடன பயிற்சியையும், நாதன் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.
இயற்கை எழில் நிறைந்த சேலம் அருகில் உள்ள அழகிய கிராமங்களில் படம் வளர்ந்துள்ளது.
விரைவில் திரைக்கு வர உள்ளது ‘ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ’
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...