80 களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகை பானுப்ரியா, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் சத்யராஜின் மனைவியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில், பானுப்ரியா வீட்டில் பணியாற்றும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்திருக்கும் புகாரில், மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்காக சிமியை பானுப்ரியா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பியதாகவும், ஆனால் ஒன்றரை வருடங்களாக சம்பளம் கொடுக்கப்படாததோடு, பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து நேரில் சென்று கேட்டதற்கு, தங்களிடம் பணம் இருக்கிறது, திருட்டு பழி சுமத்தி உன் மகளை ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம், என்று மிரட்டியதாகவும், சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...