தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நயந்தாரா தான். அவருக்கு பிறகு காஜல் அகர்வால், அனுஷ்கா, சமந்தா என்று பல நடிகைகளும் தற்போது தங்களது சம்பளத்தை சில கோடிகளாக உயர்த்தியுள்ளார்கள்.
இதற்கிடையே, உலகிலேயே அதிகமாக சம்பாதிக்கும் நடிகை யார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் பிரபல ஹாலிவுட் நடிகை எம்மா ஸ்டோன்.
‘லா லா லேண்ட்’ எனும் இசை சார்ந்த படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்ற எம்மா ஸ்டோன், ‘தி அமேஸிங் ஸ்பைடர் மேன்’, ‘பேர்ட்மேன்’ ஆகிய படங்களிலும் நடித்து உலகத்தின் மூளை முடுக்கு ரசிகர்களுக்கும் தெரிந்த முகமாகிவிட்டார்.
கவர்ச்சி, அழகு மட்டும் இல்லாமல் சிறந்த நடிப்பாற்றலும் உள்ள எம்மா, ’பேர்ட்மேன்’ படத்திற்காக சிறந்த துணை நடிக்கைக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டாலும் அவருக்கு அவ்விருது கிடைக்கவில்லை. இருந்தாலும், ’லா லா லேண்ட்’ படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதே கிடைத்துவிட்டது.
12 மாதங்களில் 26 மில்லியன் டாலர்கள் சம்பளமாக பெற்றுள்ள எம்மா ஸ்டோன், தான் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகை. அவருக்கு இந்த புகழையும் பெருமையையும் பெற்றுத் தந்தது ‘லா லா லேண்ட்’ படம் தானாம்.
ஆஷிர்வத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...