Latest News :

”’மெஹந்தி சர்க்கஸ்’ படத்தில் பாசிட்டிவ் எனர்ஜி இருக்கிறது” - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா
Saturday January-26 2019

கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் ராஜு முருகன் கதை, வசனத்தில், அறிமுக இயக்குநர் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’. இதில் மதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திருப்பதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

 

சான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், நடிகர்கள் சிவகுமார், பாக்யராஜ், இயக்குநர்கள் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, சிம்பு தேவன், எச்.வினோத்ய், நலன் குமாரசாமி, சிறுத்தை சிவா, மெளன குரு சாந்தகுமார், எழில், கரு.பழனியப்பன், எஸ்.ஆர்.பிரபு, ராஜசேகர், பாடகர் விஜய் யேசுதாஸ், சக்திவேல், சன்னி ஜி.ரமேஷ் பாபு மற்றும் பலர் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராஜு முருகன், “இது எனக்கு நெகிழ்ச்சியான மேடை. என்னை உருவாக்கியவர்கள் யுகபாரதியும் சரவணனும் தான். சரவணினின் கிரியேட்டிவிட்டி அளப்பரியது. ஜோக்கர், ஜிப்ஸி என என் அனைத்து படத்திற்கும் இவர்களின் பங்கு உண்டு.

 

கதை, வசனம் என என் பெயர் இருந்தாலும் இது சரவணனின் படம். ஒளிப்பதிவாளர் செல்வா மிகவும் திறமையானவர். அதனால் தான் ஜிப்ஸி படத்தில் அவரை ஒப்பந்தம் செய்தேன். மெஹந்தி சர்க்கஸ் படம் உருவாக முக்கிய காரணம் ஈஸ்வரன் மற்றும் ஞானவேல் ராஜா தான்.

 

இப்படம் எங்களின் தம்பி ஸ்டாலினுக்கு சமர்ப்பணம். அவர் தற்போது எங்களுடன் இல்லை.

 

சான் ரோல்டன் இசை தான் இப்படத்திற்கு முக்கியமான ஒன்று.” என்று கூறினார்.

 

Mehandi Circus

 

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில், “வெற்றிமாறன், பாண்டியராஜ் சார் ஆகியோர் அட்டகத்தி படத்தை ப்ரோமோட் செய்து வெற்றி பெற செய்தார்கள். அந்த படத்தில் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது. அந்த எனர்ஜி தற்போது மீண்டும் இந்த படத்தில் கிடைத்துள்ளது. 

 

சமுதாயத்தில் பேச தயங்கும் பிரச்னைகளை ராஜு முருகன் ஜிப்ஸியில் பேசியுள்ளார். அவரது சேவை தொடர 

 

வேண்டும். இந்த படத்திற்கு அவரின் பங்கு பெரிது. விழா நாயகன் சான் ரோல்டனின் இசைக்கு நான் அடிமை. இவர்களின் நட்பு தொடர வேண்டும்.” என்றார்.

 

இயக்குநர் சரவண ராஜேந்திரன் பேசுகையில், “யுகபாரதி, கரு பழனியப்பன், ராஜு முருகனிடம் பேச கற்று கொள்ள வேண்டும். நலன் குமாரசாமிக்கு உறுதுணையாக இருக்க ஆசைப்படுகிறேன். ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரும் சிறப்பாக பணியாற்றினார்கள். சான் ரோல்டன் இசை படத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஸ்வேதா இந்த படத்தில் கேரக்டராகவே வாழ்ந்துள்ளார்.” என்றார்.

Related News

4134

சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரார் திரில்லர் ’7G’ ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது!
Tuesday June-25 2024

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி,  இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது...

அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் ’டிஎன்ஏ’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!
Tuesday June-25 2024

ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது...

’கல்கி 2898 கி.பி’ படத்தின் க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியானது!
Tuesday June-25 2024

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் ’கல்கி 2898 கிபி’ படத்தின் பேச்சாகவே இருக்கிறது...