தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகராக உயர்ந்திருக்கும் யோகி பாபு, இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், அவரை அனுகும் தயாரிப்பாளர்கள் பலரிடம் தேதி இல்லை என்றும் அவர் மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், யோகி பாபு நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் போலீஸ் அவரை சந்தேகத்தின் பேரில் பிரித்து அடித்ததோடு, ரொம்ப நேரமாக ஸ்டேஷனில் வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் யோகி பாபு, நாடகத்தில் நடித்து முடித்துவிட்டு நள்ளிரவு வீடு திரும்பி கொண்டிருந்த யோகி பாபுவை போலீஸார் மடக்கி பிடித்து விசாரித்தார்களாம். அந்த நேரம் சென்னையில் சாலையில் நின்றுக் கொண்டிருக்கும் பைக்குகள், கார்களை மர்ம நபர் எரிக்கும் சம்பவம் பரபரப்பானதால், அந்த நபர் யோகி பாபுவாக இருக்கலாம் என்று எண்ணிய போலீசார், அவரை அடித்து விசாரித்ததோடு, யோகி பாபு சொன்னதை நம்பாமல், ஸ்டேஷனிலேயே அவரை வைத்திருந்தார்களாம்.
பிறகு, நீண்ட நேரத்திற்குப் பிறகு யோகி பாபு மீது நம்பிக்கை வந்தவுடன், அவரை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...