தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய், தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருவதோடு, தனது படங்களில் அரசியல் கருத்துக்களையும், சமூக விழிப்புணர்வு பற்றியும் பேசி வருகிறார். அட்லீ இயக்கத்தில் அவர் தற்போது நடித்து வரும் படத்தில் விளையாட்டுத் துறையில் இருக்கும் மோசடிகள் பற்றி பேசப் போகிறார்.
இந்த நிலையில், விஜயின் மகன் சஞ்சயும் விரைவில் ஹீரோவாக களம் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது நண்பர்களுடன் இணைந்து குறும்படம் ஒன்றை இயக்கி நடித்திருந்த சஞ்சய், அந்த குறும்படத்தை இணையத்திலும் வெளியிட்டார். எந்தவித பிரம்மாண்டமும் இன்றி, தனது நண்பர்களுடன் சேர்ந்து சாதாரண கேமரா மூலம் சஞ்சய் எடுத்திருந்த அந்த குறும்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், சஞ்சய்க்கு நடிப்பு மீது ஆர்வம் இருப்பதால் விஜயும் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இதை தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் சஞ்சயை தனது படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் இருக்கும் ஷங்கர், அப்படம் முடிந்த பிறகு முழுக்க முழுக்க இளமை ததும்பும் காதல் படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம். அதில் தான் சஞ்சயை ஹீரோவாக்க இருக்கிறாராம். சஞ்சயுடன் விக்ரம் மகன் துருவையும் நடிக்க வைக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...