நாகர்ஜுனா - அமலா தம்பதியின் மகன் அகில் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘ஹலோ’ திரைப்படம் அதே பெயரில் தமிழிலும் வெளியாகிறது. தமிழிலும் நாகர்ஜுனாவே இப்படத்தை தயாரிக்கிறார். இதில் நாயகியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷினியின் மகள் கல்யாணி நடித்திருக்கிறார்.
மாதவன் நடித்த ‘யாவரும் நலம்’, சூர்யாவின் ‘24’ ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் கே.குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். மற்றும் ஜெகதிபாபு, அஜெய், சத்யகிருஷ்ணா, அனீஸ் குருவில்லா, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரொமாண்டிக் ஆக்ஷன், திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பிரம்மாண்ட சண்டைக் காட்சிகளுக்காக இங்குள்ள ஸ்டண்ட் கலைஞர்களுடன் தாய்லாந்து ஸ்டண்ட் கலைஞர்களும் இணைந்து பணியாற்றியுள்ளார்கள்.
வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தை ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேஷன்ஸ் சார்பில் ஏன்.என்.பாலாஜி உலகம் முழுவதும் வெளியிடுக்கிறார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...