மறைந்த இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திராவிடம் பாராட்டு பெற்ற ‘பேச்சி’ என்ற குறும்படம் முழுநீள திரைப்படமாக உருவாகிறது.
30 நாட்கள் அடர்ந்த காட்டுக்கள் ஒரே ஷெட்யூலாக படமாக்கப்பட உள்ள இப்படத்தை ராமச்சந்திரன் இயக்குகிறார்.
இதுவரை வந்த ஹாரர் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பாக உருவாகும் இப்படத்திற்காக, இயக்குநர் ராமச்சந்திரன் பில்லி, சூனியம் பற்றி மிக நுணுக்கமாக ஆராய்ச்சி செய்து கதையை எழுதியுள்ளார். ராமச்சந்திரனின், இத்தகைய முயற்சி, ரசிகர்களுக்கு புதுமையான அட்வெஞ்சர் அனுபவத்தை கொடுப்பதோடு, வித்தியாசமான அதே சமயம் விஷயம் உள்ள ஒரு திகில் படத்தை பார்த்த அனுபவத்தையும் கொடுக்கும் என்பது உறுதி.
வெயிலோன் எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஆர்.பரந்தாமன், விக்னேஷ் செல்வராஜன், விஜய் கந்தசாமி ஆகியோர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, பார்த்திபன் ஒளிப்பதிவு செய்கிறார். குமார் கங்கப்பன் கலையை நிர்மாணிக்க, இக்னேஷியஸ் அஸ்வின் படத்தொகுப்பு செய்கிறார்.
நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்ட ‘பேச்சி’ படத்தின் பஸ் லுக் போஸ்டர் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...