சினிமா ரசிகர்கள் தங்கள் வாழ்வில் நடந்த அற்புத அனுபவத்தைப் பேசி வீடியோ பதிவு செய்து அனுப்பினால் சுவையான பதிவுக்கு 'கிரிஷ்ணம்' படக்குழுவினர் தங்கக் காசுகள் பரிசு வழங்கவுள்ளனர். கிரிஷ்ணம் படக்குழுவின் இந்தப் புதுமையான அறிவிப்பைப் பயன்படுத்திப் பரிசுகளை அள்ளுங்கள்.
கேரளாவில் குருவாயூரப்பன் அருளால் ஒருவர் வாழ்வில் நடந்த உண்மையான அற்புத நிகழ்வை அடிப்படையாக வைத்துதான் 'கிரிஷ்ணம் 'படம் உருவாகியுள்ளது. அந்த ஒருவர் வேறு யாருமல்ல ,இப்படத்தின் தயாரிப்பாளர்தான்.
தனக்கு நேர்ந்த அனுபவத்தை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் ,தானே தயாரிப்பாளராகி பி என்.பலராம் என்பவர் இப்படத்தை எடுத்துள்ளார். 'கிரிஷ்ணம் ' என்கிற இப் படம் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வைக் கொண்டு உருவாகியுள்ளது.
அதே போல தங்கள் வாழ்வில் நிகழ்ந்த, பிறரால் நம்ப முடியாத ஆனால் உண்மையிலேயே நடந்த அற்புதமான அனுபவங்களை அனுப்புவோருக்குத் தங்கக் காசுகள் வழங்க கிரிஷ்ணம்' தயாரிப்பாளர் முன் வந்துள்ளார்.
அப்படிப்பட்ட அனுபவங்களைச் சந்தித்தவர்கள் அதை வீடியோ பதிவாக்கி பேஸ்புக் ,வாட்சப், இன்ஸ்டாகிராம், லைக் , ஷேர் சாட் டிக் டாக், மூலம் அனுப்பி வைத்தால் தங்கக்காசு ஐந்து நாளைக்கு ஒருமுறை வழங்கவுள்ளதாக 'கிரிஷ்ணம்' படத்தின் தயாரிப்பாளர் பி.என் பலராம் கூறியுள்ளார். இப்பரிசு மழை 'கிரிஷ்ணம் 'படம் வெளியாகும் வரை தொடரும்.
இப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். அக்ஷய் கிருஷ்ணன், நாயகனாக நடிக்க . நாயகியாக ஐஸ்வர்யா உல்லாஸ் நடித்துள்ளார். பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...