‘உன்னாலே உன்னாலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் வினய். பெங்களூரை சேர்ந்த இவர், தனது முதல் படத்தை தொடர்ந்து ‘ஜெயம் கொண்டான்’, ‘மிரட்டல்’, ‘ஒன்பதுல குரு’, ‘என்றென்றும் புன்னகை’, ‘அரண்மனை’ என்று பல படங்களில் நடித்து வந்தாலும், அவர் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
இதற்கிடையே, மிஷ்கியன் இயக்கத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுத்த வினய்க்கு, தொடர்ந்து வில்லன் வேடத்தில் நடிப்பதற்கே அழைப்பு வந்ததாம். வேறு வழியில்லை என்று, ‘நேத்ரா’ என்ற படத்திலும் மீண்டும் வில்லனாக நடித்திருக்கிறார்.
இப்படம் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதற்காக படத்தின் இயக்குநர் வினயை அழைக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது போனை எடுத்த அவரது மேனஜர், ”வினய் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்ய கிளம்புட்டாரு” என்று கூறியிருக்கிறார்.
பிரம்மாண்டமான மற்றும் மண்சார்ந்த சினிமா அனுபவங்களுக்கு பெயர் பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ், மீண்டுமொருமுறை தலைசிறந்த காட்சியனுபவத்தை தரவுள்ளது...
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...