பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கும் கஸ்தூரி ராஜா, மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்டமான முறையில் ’பாண்டி முனி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரல் அகோரி வேடத்தில் பிரபல பாலிவு நடிகர் ஜாக்கி ஷராப் நடிக்கிறார்.
சென்னையில் பரபரப்பாக பாண்டி முனி படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், படம் குறித்து பகிர்ந்துக் கொண்ட இயக்குநர் கஸ்தூரி ராஜா, “இந்த காரக்டருக்கு முதலில் நான் பேசியது ராஜ்கிரண் சாரிடம் தான்.
அவர் கதையை கேட்டு விட்டு இந்த கதை நிறைய வேலை வாங்கும், மலை, காடு எல்லாம் ஏறி இறங்க வேண்டி இருக்கும். அவ்வளவெல்லாம் கஷ்டப்பட முடியாது, என்று சொல்லி விட அதற்கப்புறம் வேறு சில நடிகர்களையெல்லாம் கடந்து ஜாக்கியிடம் வந்து நின்றது.
கதையை கேட்டு முடித்த அவர் இதோ வருகிறேன் என்று வீட்டுக்குள் போனவர் அரை மணி நேரமாக ஆளையே காணோம். இவரும் நடிக்க மாட்டார் போலிருக்கு, என்று வேறு நடிகர்களை மனதுக்குள் ஓட விட்டேன். வெளியே வந்த ஜாக்கி இடுப்பில் மஞ்சள் துணியை கட்டிக் கொண்டு இது மாதிரி தானே காஸ்டியூம், என்று கேட்க ஆடிப் போய் விட்டேன்.
என் கதைக்குள் இருந்த முனீஸ்வரன் கதாபாத்திரமாகவே மாறி இருந்தார். அந்தளவுக்கு சின்சியரான நடிகர் இவர். நடிகராக இல்லாமல் நல்ல நண்பராக பழகிக் கொண்டிருக்கிறோம்.
படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்திருக்கிறது. ஹாரர் படமாக பாண்டி முனி வளர்ந்து கொண்டிருக்கிறது.” என்றார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...