தமிழ் சினிமாவில் இயக்குநராக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தற்போது ஹீரோவாக வெற்றி பெற வேண்டும், என்ற லட்சியத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அதிலும், தானே இயக்கி தானே நடிக்காமல், பிற இயக்குநர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்ற முடிவிலும் இருக்கிறார்.
அதன்படி, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘இறவி’ படத்தில் நடித்த சூர்யாவுக்கு பாராட்டு கிடைத்தது. அப்படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில்’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தாலும், தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்திலும் நடிக்கிறார். இப்படத்தில் அவருடன் அமிதாப் பச்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் ஜோதிகாவை நடிக்க வைக்க விரும்பிய எஸ்.ஜே.சூர்யா, அவரை சமீபத்தில் அனுகியிருக்கிறார். ஆனால், ஜோதிகாவோ எந்தவித யோசனையும் செய்யாமல் சட்டென்று மறுத்துவிட்டாராம்.
’வாலி’ படத்தின் மூலம் ஜோதிகாவை சினிமாவில் அறிமுகப்படுத்திய எஸ்.ஜே.சூர்யா, ‘குஷி’ படத்தின் மூலம் அவரை முன்னணி நடிகையாக்கியதால், நிச்சயம் தனது படத்தில் நடிப்பார் என்ற நம்பிக்கையோரு அவரை அனுக, ஜோதிகாவோ சட்டென்று அவரை நிராகரித்து அவரை அப்செட்டாக்கி விட்டாராம்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...