’கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் தனது மனைவியை தேடி சென்னை வரும்போது அவருக்கு பாதுகாவலராக வருவதோடு, புதுச்சேரியி பிரெஞ்காரர் வீட்டில் அவர் இருப்பதை உறுதி செய்யும் வேடத்தில் நடித்தவர் தான் விஸ்வநாத். ‘அட்ட கத்தி’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் விஸ்வநாத், ‘கபாலி’ யில் ரஜினியிடம் “மெட்ராஸ் காருங்க சார் நம்புங்க..” என்று வசனம் பேசி ஒட்டுமொத்த சென்னை மக்களிடம் மட்டும் இன்றி தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்.
‘கபாலி’ முடிந்த கையோடு இந்தி படம் ஒன்றில் கமிட் ஆன விஸ்வநாத், தற்போது தமிழில் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். ‘ஒநாய்கள் ஜாக்கிரதை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரித்விகா ஹீரோயினாக நடிக்கிறார்.
விறுவிறுப்பான படப்பிடிப்பில் உள்ள இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 வெளியாகிறது. இதனை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.
எஸ் பயாஸ்கோப் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜே.பி.ஆர் இயக்கியுள்ளார்.
ஆஷிர்வத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...