ரஜினிகாந்தின் இளைய மகளான செளந்தர்யா, அஸ்வின் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பிறகு மோஷன் அனிமேஷன் திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்தி அவர், ரஜினியை வைத்து ‘கோச்சுடையான்’ என்ற படத்தை இயக்கினார். அப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதற்கிடையே செளந்தர்யாவுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை பிறப்புக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்தவர், நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்தும் பெற்றுவிட்டார். விவாகரத்துக்கு பிறகு தனுஷை ஹீரோவாக வைத்து ‘விஐபி 2’ படத்தை இயக்கியவர், தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான வணங்காமுடியின் மகன் விசாகனை காதலித்ததோடு, அவரை திருமணம் செய்துகொள்ளவும் ரெடியாகிவிட்டார்.
செளந்தர்யா - விசாகன் திருமணம் பிப்ரவரி 11 ஆம் தேதி, ரஜினிகாந்தின் சென்னை இல்லத்தில் எளிமையான முறையில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், திருமணத்திற்கு முன்பாக செளந்தர்யா யாரும் எதிர்பாராத அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தொடராக தயாரிக்கப் போகிறாராம்.
மணிரத்னம் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக எடுக்க முயற்சித்து முடியாமல் கைவிட்ட நிலையில், செளந்தர்யா அதை கையில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...