விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் ‘மாமனிதன்’ படப்பிடிப்பில் நடிகை ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘மாமனிதன்’ படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலப்புழாவில் படப்பிடிப்பு நடைப்பெற்றது. அப்போது அங்கு வந்த மூதாட்டி ஒருவர், விஜய் சேதுபதியிடம் மருந்து வாங்க பணம் கேட்டார். அவரும் பணம் கொடுத்தார். விஜய் சேதுபதி பணம் கொடுத்த வீடியோ வெளியாகி வைரலானது.
இந்த நிலையில், விஜய் சேதுபதியிடம் பணம் வாங்கிய மூதாட்டி, படப்பிடிப்பு தளத்தில் இருந்து கிளம்பிய போது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இறந்த முதாட்டி, மலையாள நடிகை கவலம் அச்சம்மா என்பதும், அவர் ஜெயராம் நடித்த ஞான் சல்பேரு ராமன்குட்டி உள்ளிட்ட சில மலையாளப் படங்களில் நடித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
நடிகை கவலம் அச்சம்மா படப்பிடிப்பில் உயிரிழந்த சம்பவம் கேரள சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, விஜய் சேதுபதியையும் கவலையடைய செய்திருக்கிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...