80 களில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜெயப்பிரதா, ‘சலங்கை ஒலி’, ‘மன்மத லீலை’, ‘நினைத்தாலே இனிக்கும்’ உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்திருப்பதோடு, இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல இந்திய மொழிகளில் நடித்திருக்கிறார்.
தீவிர அரசியலில் ஈடுபட்ட பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜெயப்பிரதா, தற்போது சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் நிலையில், அவர் தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ஜெயப்பிரதா முன்னணி நடிகையாக இருந்த போது, அவரது புகைப்படத்தை ஆபாசமாக மாபிங் செய்து சில விசமிகள் வெளியிட்டார்களாம். அவை வெளியானதும், ஜெயப்பிரதா தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாக, சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலில் ஈடுபட்டு தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்கு ஒருவர் ஆசிட் மிரட்டல் விடுத்தாராம். இப்படி பல தடைகளையும், எதிர்ப்புகளையும் கடந்து தான் அவர் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் வெற்றி பெற்றிறாராம்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...