தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஆர்யா, கிசுகிசுக்களிலும் முன்னணியில் இருக்கிறார். தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களுடன் சேர்த்து கிசுகிசுக்கப்படுவது ஆர்யாவுக்கு சகஜமான ஒன்றாகிவிட்டது.
இதற்கிடையே, ஆர்யாவின் திருமணம் எப்போது, என்று ரசிகர்கள் மட்டும் இன்றி, அவரது சக நடிகர்களும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பிரபல நடிகை சாயீஷாவுடன் காதல் மலர்ந்திருப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.
மேலும், சாயீஷா மற்றும் ஆர்யா குடும்பத்தார் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததோடு, வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ஆர்யா பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், நடிகை சாயீஷாவின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம். மேலும், ஆர்யாவை சாயீஷா திருமணம் செய்துகொள்வதையும் அவர்கள் விரும்பவில்லையாம். “யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள், ஆர்யா மட்டும் வேண்டாம்” என்று சாயீஷாவுக்கு அட்வைஸ் செய்கிறாரகளாம்.
இதனால், ஆர்யா கல்யாணத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகும், அதனால் அவர் மீண்டும் பேச்சுலர் வாழ்க்கைக்கே திரும்பக்கூடும், என்றும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...