சர்ச்சையான வேடங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தும் சில ஹீரோயின்கள் நடிப்பில் மட்டும் இன்றி நிஜ வாழ்க்கையில் அவ்வபோது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் முக்கியமானவர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் வித்யா பாலன்.
கேரளாவை பூர்விகமாக கொண்ட வித்யா பாலன், பாலிவுட்டில் பல ஆண்டுகளாக முன்னணி ஹீரோயினாக உள்ளார். ‘குரு’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும், அம்மணி பாலிவுட்டுக்கு தான் அதிகமான முக்கியத்துவம் கொடுப்பார்.
தற்போது, எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் வித்யா பாலன், சமீபத்தில் தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரிடம், “வயதாகிவிட்டது என்று கவலைக் கொள்கிறீர்களா? என்று கேட்டார்கள்.
அதற்கு பதில் அளித்த வித்யா பாலன், ”40 வயதில் தான் நான் உன்னும் கவர்ச்சியாக இருப்பதாக உணர்கிறேன். 40 வயதுக்கு பிறகு பெண்களுக்கு செக்ஸில் நாட்டம் இருக்காது, என்று சொல்வதெல்லாம் சுத்த பொய். 40 வயதுக்கு மேல் தான் எனக்கு செக்ஸ் மீது பல விதத்தில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. கவர்ச்சியாக உணர்கிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.
வித்யா பாலனின், இத்தகைய பதிலுக்கு நடிகைகள் பலர் வரவேற்பு தெரிவித்திருப்பதோடு, அவரது தைரியமான பேச்சுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...