Latest News :

ஹீரோவை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் சந்தானம்!
Monday February-04 2019

காமெடி நடிகராக இருந்த சந்தானம், தற்போது ஹீரோவாகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். ஹீரோவாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த சந்தானத்தின் நடிப்பில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் இரண்டாம் பாகமான ‘தில்லுக்கு துட்டு 2’ இம்மாதம் 7 ஆம் தேதி வெளியாகிறது.

 

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராம்பாலா, ஒளிப்பதிவாளர் தீபக்குமார் பதி, சந்தானம் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் சந்தானம் பேசுகையில், “நீண்ட நாள் கழித்து அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 'தில்லுக்கு துட்டு' முதல் பாகத்தில் கடைசி 20 நிமிடம் ரசிகர்கள் இடைவிடாமல் சிரித்தார்கள். அதை நேரடியாக பார்த்தோம். அதுபோல, இப்படமும் முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் கலந்து பேசி படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். நான் இந்தளவுக்கு வளர்வதற்கு எனக்கு முதுகெலும்பாக இருப்பது மாறன், ஆனந்த், குணா, சுந்தர், சேது மற்றும் ஜான்சன் ஆகியோர்கள் தான்.

 

'லொள்ளு சபா' தொலைக்காட்சி நிகழ்ச்சி வித்தியாசமானது என்று பெயர் வாங்கியது போல், இப்படத்திலும் வித்தியாசமான நகைச்சுவையாக இருக்க புது முயற்சி எடுத்திருக்கிறோம். ஷ்ரதா சிவதாஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தின் இரண்டாவது பாதி கேரளா பின்னணியில் இருப்பதால் கேரளா பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவரை தேர்ந்தெடுத்தோம்.'மொட்டை' ராஜேந்திரன்,  விஜய் டிவி ராமர், விபின், சிவசங்கர் மாஸ்டர், விஜய் டிவி தனசேகர், சி.எம்.கார்த்திக், ஊர்வசி, இயக்குநர் மாரிமுத்து, ஜெயப்ரகாஷ், பிரஷாந்த், இன்னும் பலரும் பணியாற்றியிருக்கிறார்கள். கேமரா மேன் தீபக் நன்றாக பணியாற்றியிருக்கிறார். பேய் படத்திற்கு காட்சிகள் தான் முக்கியம். அது தரமாக இல்லையென்றால் பொம்மை படம் போல இருக்கும். அதற்காக கூடுதலாக உழைத்திருக்கிறார்.அதேபோல், காதல் பாடலை நன்றாக அமைத்து கொடுத்திருக்கிறார்.

 

ஷபீர் நன்றாக இசையமைத்திருக்கிறார்.இரண்டு பாடல்களும் சாண்டி தான் நடனம் அமைத்திருக்கிறார். கலை இயக்குநர் மோகன், சண்டை பயிற்சி தினேஷ், 

 

நடிகராக இருப்பதை விட தயாரிப்பாராக இருப்பது தான் கஷ்டம். பலரும் ஆர்யா திருமணத்தைப் பற்றி தான் கேட்கிறார்கள். அதை அவரிடமே கேட்டு சொல்கிறேன். வருடத்திற்கு ஒரு படம் தான் நடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏற்கனவே 3 படங்கள் முடிந்த நிலையில் இருக்கிறது. வெளியாவதற்கு தாமதம் ஆகிறது.

நான் இயக்குநரானால் ஆர்யாவை வைத்து தான் படம் எடுப்பேன். சிம்புவிற்கென்று கதை எழுதி தான் இயக்க வேண்டும். எந்த படம் எடுத்தாலும் நல்ல படமாக இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. என்னை 'லொள்ளு சபா'வில் அறிமுகப்படுத்திய பாலாஜி அண்ணன், சினிமாவில் அறிமுகப்படுத்திய சிம்பு  அவர்களுக்கு நன்றி. என்னை கதாநாயகனாக்கிய ரசிகர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என் ரசிகர்கள் நீங்க தான் என்னுடைய முன்மாதிரி என்று கூறும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திரா சௌந்தராஜன் இப்படத்தின் கதைக்கு உறுதுணையாக இருந்தார். மையக் கதையை அவர் தான் எழுதியிருக்கிறார். பி.ஆர்.ஓ. ஜான்சன் அவர்களுக்கும் நன்றி. எனக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

Dhillukku Dhuddu 2 Press Meet

 

 

ஒளிப்பதிவாளர் தீபக்குமார் பேசுகையில், “சந்தனம் கூட இரண்டாவது படம். இயக்குநருடன் மூன்றாவது படம். இருவருடன் பணியாற்றுவது எப்போதும் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். வெளிப்படையாக ஆலோசிக்கலாம். நம்முடைய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். அதேபோல, கதை எழுதுவதில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் அமையும். மேலும், தயாரிப்பாளர் ஒரு காட்சிக்கு தேவையானதை ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்காமல் செய்து தருவார்.  எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்ததால் தான் இப்படம் நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் இப்படம் காட்சி விருந்தாக அமையும்.” என்றார்.

 

இயக்குநர் ராம்பாலா சேசும் போது, “30 வருடமாக சினிமா துறையில் இருக்கிறேன். பல இடங்களில் கதை கூறியும் எதுவும் ஏற்றுக் கொள்ளபடவில்லை. அதன்பிறகு தான் சந்தானம் நாம் இருவரும் சேர்ந்து படம் எடுக்கலாம் என்று கூறினார். அது தான் 'தில்லுக்கு துட்டு'. இக்காலத்தில் ஒரு படம் 10 நாட்கள் ஓடினாலே பெரிய விஷயம். ஆனால், 'தில்லுக்கு துட்டு' 75 நாட்கள் கடந்து சாதனை படைத்தது. அதற்காக கேடயமும் பெற்றேன். மாறன், ஆனந்த், முருகன், சேது ஆகியோருடன் சேர்ந்து இந்த கதையை எழுதினோம். ஷபீர் இசையமைத்திருக்கிறார். இரண்டு பாடல்களும் நன்றாக வந்திருக்கிறது. படத்தொகுப்பு புதுமுகம் செஞ்சி மாறன் செய்திருக்கிறார்.” என்றார்.

Related News

4169

’காந்தாரா: அத்தியாயம் 1’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Tuesday November-19 2024

பிரம்மாண்டமான மற்றும் மண்சார்ந்த சினிமா அனுபவங்களுக்கு பெயர் பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ், மீண்டுமொருமுறை  தலைசிறந்த காட்சியனுபவத்தை தரவுள்ளது...

16 மொழிகளில் உருவாகும் விமலின் ‘பெல்லடோனா!
Sunday November-17 2024

யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...

ரூ.10 கோடிக்காக தனுஷ் மீது பரபரப்பு குற்றம் சாட்டிய நயன்தாரா!
Saturday November-16 2024

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...

Recent Gallery