தமிழ் சினிமாவின்ம் முன்னணி ஹீரோக்களில் முக்கியமானவராக இருக்கும் விஜய் சேதுபதி, தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருவதோடு, வசூலை வாரி குவிக்கும் படங்களையும் கொடுத்து வருகிறார். அப்படி அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘96’ படம் 100 நாட்களையும் கடந்து ஓட்டியது. இதனை கொண்டாடும் விதத்தில் நேற்று சென்னையில் பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்தி, படத்தில் பணியாற்றியவர்களுக்கு வெற்றி நினைவு பரிசு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, சீனு ராமசாமி இயக்கத்தில் ‘மாமனிதன்’ படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, அப்படத்தின் படப்பிடிப்புக்காக சமீபத்தில் கேரளா சென்றிருந்தார். எப்போதும் போல, தன்னை சந்திக்க வந்த ரசிகர்களை கட்டி அனைத்து, கண்ணத்தில் முத்தம் கொடுத்து, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். விஜய் சேதுபதியின் இத்தகைய நடவடிக்கையால், கேரள மாநிலத்தின், ஆலப்புழா மாநிலமே ஆடி போய்விட்டது. ஆலப்புழா ஏரியில் விஜய் சேதுபதி அலை ஏற்பட்டதோடு, கேரளா முழுவதும் விஜய் சேதுபதியின் புகழ் பரவி, அங்கும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டார்கள்.
மேலும், கேரளாவில் உள்ள ஊடகங்கள் பல விஜய் சேதுபதி நேர்காணலுக்காக காத்திருக்கிறதாம். பலர் விஜய் சேதுபதியின் மேனஜருக்கு போன் செய்து, நேர்காணல் கேட்பதோடு, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க விஜய் சேதுபதியின் தேதி கேட்டு வருகிறார்களாம்.
இந்த நிலையில், திடீரென்று கேரள மாநில முதல்வர் அலுவலகத்தில் இருந்து விஜய் சேதுபதி மேனஜருக்கு போன் வந்திருக்கிறது. முதல்வர் அலுவலகத்தில் இருந்து வரும் போன்கால் என்றதும் விஜய் சேதுபதி ஏரியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட, பிறகு கேரள அரசின் பத்திரிகைக்கு விஜய் சேதுபதியின் நேர்காணல் வேண்டும், என்று எதிர் தரப்பில் இருந்து பதில் வந்ததும், சற்று சாந்தம் அடைந்தார்களாம்.
மொத்தத்தில், தமிழக மக்களை ஈர்த்த விஜய் சேதுபதி தற்போது அண்டை மாநில மக்களையும் ஈர்க்க தொடங்கி விட்டார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...