Latest News :

”சினிமாவை இழுத்து மூடுங்க”! - இயக்குநரின் ஆவேசத்தால் பட விழாவில் பரபரப்பு
Tuesday February-05 2019

தமிழகத்தில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது, என்பதை விவரிக்கும் படமாக ‘பொது நலன் கருதி’ உருவாகியுள்ளது. கந்துவட்டியின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையிஅ அலசியிருக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகிறது.

 

அறிமுக இயக்குநர் சீயோன் இயக்கியிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில், இயக்குநர்கள் மிஸ்கின், வசந்தபாலன், மீரா கதிரவன், சமூக ஆர்வளர் திருமுருகன் காந்தி, கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி.செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் இயக்குநர் வசந்த பாலன் பேசுகையில், “சிறிய படங்களுக்கு நல்ல ரவேற்பு கிடைத்தாலும், தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. தற்போது வெளியாகியுள்ள ’பேரன்பு’, ’சர்வம் தாளமயம்’ ஆகிய படங்கள் நன்றாக இருக்கிறது. காலையில் திரையரங்குக்கு சென்று பார்க்கலாம் என்றால் தியேட்டர்கள் இல்லை. இந்த இரண்டு படங்களும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் என்ன தான் செய்கிறது? இதையெல்லாம் ஒழிக்கிறோம் என கூறி தானே பதிவிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது என்ன செய்கிறார்கள்? சிறிய பட்ஜெட் படங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

 

பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் பிரச்னையில்லாமல் வெளியாகிறது. திரையுலகமே மோசமான நிலைமையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிங்க இல்லனா தமிழ் திரையுலகத்தை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்.” என்று வருத்ததோடு பேசினார்.

Related News

4175

’காந்தாரா: அத்தியாயம் 1’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Tuesday November-19 2024

பிரம்மாண்டமான மற்றும் மண்சார்ந்த சினிமா அனுபவங்களுக்கு பெயர் பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ், மீண்டுமொருமுறை  தலைசிறந்த காட்சியனுபவத்தை தரவுள்ளது...

16 மொழிகளில் உருவாகும் விமலின் ‘பெல்லடோனா!
Sunday November-17 2024

யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...

ரூ.10 கோடிக்காக தனுஷ் மீது பரபரப்பு குற்றம் சாட்டிய நயன்தாரா!
Saturday November-16 2024

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...

Recent Gallery