தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பிரபலமான சந்தானம், அதன் பிறகு ‘மன்மதன்’ படத்தின் மூலம் காமெடி வேடத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தவர் தற்போது ஹீரோவாகவும் தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார்.
சந்தானம் பயணித்த அதே பாதையில் பயணித்து, தொலைக்காட்சியில் இருந்து திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிறகு ஹீரோவானவர் சிவகார்த்திகேயன். இருவரும் ஒரே பாதையில் பயணித்து தற்போது தமிழ் சினிமாவில் வெற்றி ஹீரோக்களாக வலம் வந்தாலும், எதிரும் புதிருமாகத்தான் இருக்கிறார்கள். எந்த பேட்டியிலும் சிவகார்த்திகேயன் குறித்து சந்தானமோ அல்லது சந்தானம் குறித்து சிவாவும் கடுகு அளவுகு கூட கருத்து தெரிவித்ததில்லை. இவர்கள் இடையே இருக்கும் இந்த பனிப்போர் தற்போது நேரடியான போராக மாறப்போகிறது.
ஆம், சந்தானத்தில் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்வர் சுந்தரம்’ படமும், சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படமும் ஒரே நாளில் வெளியாகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ இம்மாதம் 29 ஆம் தேதி ரிலீஸ் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், இன்று சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் ரிலீஸ் தேதியும் இம்மாதம் 29 ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் தயாராகி ரிலீஸாகமல் இருந்த ‘சர்வர் சுந்தரம்’ இப்படி திடீரென்று 29 ஆம் தேதி அறிவிக்கப்பட்டதற்கு சந்தானமும் ஒரு காரணமாம். காமெடி மூலம் ரசிகர்களை கவர்ந்த இருவரில் யாருக்கு ரசிகர்கள் பலம் அதிகம் என்பதை காட்டத்தான் சந்தானம் இந்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய சொன்னதாகவும் தகவல் கசிந்துள்ளது.
இருப்பினும், ’வேலைக்காரன்’ படத்தில் சில பணிகள் முடிய காலதாமதம் ஆகும் என்பதால் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஆஷிர்வத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...