தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இளையராஜாவை கெளரவிக்கும் வகையில், ‘இளையராஜா 75’ என்ற தலைப்பில் இரண்டு நாட்களுக்கு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்களுடன், பிற மாநில சினிமா பிரபலங்களும் கலந்துக் கொண்டார்கள்.
இந்த நிலையில், இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்ததற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நன்றி தெரிவித்த கையோடு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளையும் முதல்வரிடம் வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசை தாங்கள் கடவுளாக நினைப்பதாகக் கூறிய விஷால், அரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸை ஒழித்து விடலாம் என்றும் தெரிவித்தார்.
பிரம்மாண்டமான மற்றும் மண்சார்ந்த சினிமா அனுபவங்களுக்கு பெயர் பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ், மீண்டுமொருமுறை தலைசிறந்த காட்சியனுபவத்தை தரவுள்ளது...
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...