தெலுங்கில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. பாலா இயக்கத்தில் உருவான இப்படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார்.
படம் முழுவதுமாக முடிவடைந்து டீசர் வெளியான நிலையில், படம் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில், ‘வர்மா’ படம் வெளியாகது என்று தயாரிப்பு தரப்பில் திடீர் அறிவிப்பு தமிழ் சினிமாவையே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
அத்துடன், துருவை வைத்தே மீண்டும் முதலில் இருந்து வேறு ஒரு இயக்குநரை வைத்து படத்தை தயாரிக்க இருக்கிறோம், என்ற தயாரிப்பு தரப்பின் விளக்கம் கோடம்பாக்கத்தை மேலும் அதிர்ச்சியடைய செய்தது. காரணம், பல விருது படங்களை இயக்கிய பாலாவின் படத்துக்கு இப்படி ஒரு நிலையா? என்பது தான்.
இது குறித்து விசாரிக்கையில், ஆரம்பத்தில் இருந்தே தனக்கே உறித்தான பாணியில் செலவுகளை இழித்துவிட்டுக் கொண்டிருந்த பாலா, படத்தை முடித்து தயாரிப்பு தரப்புக்கு போட்டுக்காட்டியிருக்கிறார். படத்தை பார்த்தவர்கள் சில இடங்களில் கரெக்ஷன் சொல்ல, அவர்களை பாலா அசிங்கமான வார்த்தையில் திட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாராம்.
தெலுங்கில் வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படத்தை பாலாவுக்கு ரூ.15 கோடியில் எடுக்க ஒப்புக்கொண்டதோடு, அதற்கு மேலாகவும் செலவு செய்த தயாரிப்பாளர்கள் பாலாவின் அசிங்கமான வார்த்தையை தாங்கிக் கொள்ளாமல் பெரும் கோபமடைந்ததோடு, எங்களிடம் சம்பளம் வாங்கும் பாலாவுக்கே இவ்வளவு திமிர் என்றால், பணம் போட்டிருக்கும் எங்களுக்கு எவ்வளவு இருக்கும், என்று பொங்கியவர்கள், பாலாவுக்கு பாடம் புகட்டுவதற்காகவே படத்தை டிராப் செய்துவிட்டார்களாம்.
மேலும், வேறு ஒரு இயக்குநரை வைத்து படத்தை முதலில் இருந்து துருவை ஹீரோவாக வைத்தே எடுக்கவும் முடிவு செய்துவிட்டார்களாம். தயாரிப்பு தரப்பின் இந்த முடிவுக்கு நடிகர் விக்ரமும் ஓகே சொல்லிவிட்டாராம்.
பிரம்மாண்டமான மற்றும் மண்சார்ந்த சினிமா அனுபவங்களுக்கு பெயர் பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ், மீண்டுமொருமுறை தலைசிறந்த காட்சியனுபவத்தை தரவுள்ளது...
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...