இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் மாத்தளை சோமு. ஈழத்து மக்கள் வாழ்வியலை, போராட்டங்களை, வலிகளைத் தன் எழுத்தில் வெளிப்படுத்தி வருபவர். புலம் பெயர்ந்து வாழும் அவர் இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். 25 நூல்களுக்கும் மேல் படைத்துள்ள அவர், அண்மையில் சென்னை வந்திருந்த போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சினிமா குறித்தும், தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் குறித்து பேசினார்.
அப்போது, எழுத்தாளர்கள் திரைப்படங்களில் பணியாற்றுவது வளர்ச்சியா? என்று கேட்டதற்கு, “இதைப் பெரிய வளர்ச்சியாகக் கருத முடியாது. ஒரு காலத்தில் கதாசிரியர், வசனகர்த்தாக்களுக்கு மதிப்பு இருந்தது. அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, திருவாரூர் தங்கராசு செல்வாக்காக இருந்தார்கள். பிறகு பீம்சிங், .எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் இருந்தார்கள். தொடர்ந்து பாரதிராஜா,பாக்யராஜ் வந்தார்கள்.பின்பு படிப்படியாக சினிமா நடிகர்கள் கையில் போய்விட்டது. இன்றைய வர்த்தக சூழலில் முழுக்க நடிகர்கள் கையில் உள்ளது. இந்நிலையில் தாங்கள்தான் பெரிய இலக்கியவாதிகள்--பெரிய படைப்பாளிகள் என்பவர்கள் தொழிலுக்காக பணத்துக்காக எழுதுகிறார்கள். கேட்டால் அதுவேறு இதுவேறு என்கிறார்கள் படங்களில் இவர்கள் எழுதியவை மூன்றாம்தர நாலாம்தர வசனம்தான் . எழுதிய படங்களில் அப்படி என்ன இலக்கியம் படைத்தார்கள்? யாருக்கோ முதுகு சொறிந்து விட எழுதுகிறார்கள். இதில் என்ன தாங்கள் பெரிய படைப்பாளிகள்”, என்று ஆவேசம் அடைந்தார்.
தொடர்ந்து பேசியவர், “எஸ்.ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருது பெற்றபோது ரஜினி தன் வீட்டுக்கு அவரை அழைத்துப் பாராட்டினார். இது என்ன மரியாதை? மிகவும் கேவலமாக இருக்கிறது. இதுதானா ஒரு படைப்பாளிக்குக் கொடுக்கப்படும் மரியாதை.? பாராட்டு பெறுபவர் மேடையில் இருந்தால் பாராட்டலாம் மற்ற நேரங்களில் பாராட்ட வேண்டுமென்றால் நேரில் சென்று பாராட்டுவதே முறை. மரபு , மரியாதை.இது அவமரியாதையல்லவா?
ராமகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்றல்லவா ரஜினி பாராட்டியிருக்க வேண்டும்? வெளியே செல்லமுடியாமல் ரஜினி என்ன நோய்வாய்ப்பட்டா கிடக்கிறார்?” என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...