‘தடையற தாக்க’, ‘மீகாமன்’ படங்களை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் படம் ‘தடம்’. அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில், தான்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்மிருதி வெங்கட், சோனியா அகர்வால் என நான்கு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள்.
ரெதான் சினிமாஸ் நிறுவனம் சார்பில் இந்தர் குமார் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மகிழ்திருமேனி, “’தடையற தாக்க’ என் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த படத்துக்கு பிறகு, 2 வது முறையாக அருண் விஜயுடன் இணைந்ததில் மகிழ்ச்சி. அவர் ஒரு இயக்குநரின் கதாநாயகன். அவர் கேரியரில் இந்த படமும் மறக்க முடியாத தடத்தை பதிக்கும். செய்தித்தாளில் படித்த ஒரு செய்தி என் மனதை பெரிதாக பாதித்து படமாக உருவாகி இருக்கிறது.” என்றார்.
அருண் விஜய் பேசும் போது, “எனக்கு காதல் காட்சிகளில் நடிப்பது என்றாலே உதறும். இந்த படத்தில் ஒரு உதட்டு முத்த காட்சி இருக்கிறது. அதில் நான் நடிக்க மாட்டேன், என்று கூறினேன். ஆனால் இயக்குநர் என் மனைவியிடம் பேசி என்னை சம்மதிக்க வைத்துவிட்டார். அதன் விளைவுகளை இன்றும் அனுபவிக்கிறேன்.” என்றார்.
உடனே குறுக்கிட்ட இயக்குநர் மகிழ்திருமேனி, ”அருண் கதாநாயகியின் உதட்டை கடித்து இருக்கிறார். இதை சென்சாரிலேயே கவனித்து சொன்னார்கள்” என்று கூற, உடனே குறுக்கிட்ட அருண் விஜய் வெட்கத்துடன் மறுப்பு தெரிவித்தார்.
ஆனால், அருண் விஜய் கடித்ததாக சொல்லப்படும் உதட்டுக்கு சொந்தக்காரியான ஹீரோயின் மட்டும், எந்த ரியாக்ஷனும் இல்லாமல் மேடையில் அமைதியாக இருந்தார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...