'M10 PRODUCTION' சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரித்து வரும் படம் ‘பக்ரீத்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் ஜெகதீசன் சுபு.
ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக விக்ராந்தும், ஹீரோயினாக வசுந்தராவும் நடித்துள்ளனர். மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டீசரை பிரபல இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், அட்லி, நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா, விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டு படம் வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்து வருகிறார். திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குநராகவும், மதன் கலை இயக்குநராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.
விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. கோடை விடுமுறையில் பக்ரீத் வெளியாக இருக்கிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...