‘சுப்பிரமணியபுரம்’ என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் சசிகுமார், அப்படத்தின் மூலம் நடிகராகவும் வெற்றிப் பெற்றவர் தொடர்ந்து ஹீரோவாக பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். தற்போது சசிகுமார் நடிப்பில் ‘நாடோடிகள் 2’, ‘கென்னடி கிளப்’, ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியிருக்கும் சசிகுமார், அப்படத்தில் முதல் முறையாக ஐடி துறையில் பணிபுரியும் இளைஞராக நடிக்கிறார். எப்போதும் கிராமத்து கதைகளிலே நடித்து வந்த சசிகுமாருக்கு இந்த வேடமும் முற்றியிலும் வித்தியாசமானது என்பதால், இப்போது இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கில் கல்ராணி நடிக்க, ராதா ரவி, தம்பி ராமைய்யா, விஜய குமார், ரேகா, சுமித்ரா, சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, நிரோஷா, யோகி பாபு போன்ற 30 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள்.
செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்தை கதிர்வேலு என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் சுந்தர்.சி-யிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். சுரேஷ் கலைத் துறையை கவனிக்க, சபு ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் பொள்ளாச்சியில் தொடங்குகிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...