நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா, முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில், இன்று அவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெறுகிறது. விசாகன் என்ற தொழிலதிபரை அவர் மணக்கிறார். ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாக விசாகனுக்கும் இது இரண்டாவது திருமணம் தான்.
பல ஆயிரம் கோடிக்கு அதிபதியான விசாகன் - செளந்தர்யா திருமணம் காதல் திருமணமாகும். கடந்த நான்கு நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று செளந்தர்யாவின் திருமணம் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறுகிறது. இதில் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொள்கிறார்கள்.
இந்த நிலையில், செளந்தர்யா தனது வாழ்க்கையில் மூன்று ஆண்கள் முக்கிய மனிதர்களாக இருக்கிறார்கள், என்று தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர்கள், அவரது அப்பா ரஜினிகாந்த், மகன் வேத் மற்றும் தற்போதைய கணவர் விசாகன் ஆகியோர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Blessed & grateful beyond words !!!! The three most important men in my life ... my darling father ... my angel son ... and now you my Vishagan ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/v7Ra32oiYe
— soundarya rajnikanth (@soundaryaarajni) February 10, 2019
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...