கமல்ஹாசனின் அண்ணனும், நடிகருமான சாருஹாசன் கேங்க்ஸ்டராக நடித்திருக்கும் ‘தாதா 87’ வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் மற்றும் டீசருக்கு கிடைத்த வரவேற்பால், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை திரு எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.
கலை சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை விஜய் ஸ்ரீ இயக்கியிருக்கிறார். சாருஹாசன் தாதாவாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...